கிராம / வார்டு சுயராஜ்யம் (10 Heros)
பிச்சை எடுப்போர், ரோட்டோரத்தில் இருப்பவர்களை உரிய இல்லத்தில் சேர்க்க வேண்டும்.
கிராமத்தில் அனைத்து தெருக்களையும் வரையரை செய்து மரம் நட வேண்டும்.
சாக்கடைகள் வரையரை செய்ய வேண்டும்.
ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
ஆதார் அட்டை அனைவருக்கும் வேண்டும்.
Don't ask Don't Say ஜாதியையும், மதத்தையும் யாரிடமும் கேட்கவும், சொல்லவும் கூடாது.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அங்குள்ள குழந்தைகள் அவர்கள் வீட்டில் உள்ள லேப்டாப்பை எடுத்து வரச்சொல்லி கணினி
கல்வி வழங்க வேண்டும்.
தினமும் மாலைஆண் குழந்தைகளை தாத்தாக்கள் தனியாகவும், பெண் குழந்தைகள் பாட்டிகள் தனியாகவும் அழைத்து வந்து அனைத்து விளையாட்டுகளும் விளையாட வைக்க வேண்டும்.
ஊரின் வரைபடம் வாங்க வேண்டும் (V.A.O)
அரசு நிலம், நீர் நிலை எது என்று அறிந்து அங்கு பூங்கா, கல்வி சாலை, TNPSC கோச்சிங் சென்டர். அமைக்க வேண்டும்.
அனைத்து குழந்தைகளையும் படிக்க வைக்க பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாலை நேர கல்வி (டியுசன்) எடுக்கப்பட வேண்டும் அனைத்தும் பொதுமக்கள் முன்னிலையில் நடக்க வேண்டும்.
வீட்டில் உள்ள தாத்தா, பாட்டியை அழைத்து தினம் தினம் கதை சொல்ல வைக்க வேண்டும்.
ஒழுக்கம் நிறைந்த கதைகளையும், அதன் நன்மைகளையும் எடுத்துரைக்க வேண்டும்.
ஊர்த்தலைவர்களை வைத்து முதியோர் உதவித்தொகை, விதவைகள், ஆதரவற்றோர் உதவித்தொகை கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து, பொதுக்கழிப்பிடம் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும்.
கண்மாய் தூர் வாருவது, நிலத்தடி நீர் மட்டத்தை தேக்கி வைப்பது.
ஊரில் எந்த விதத்திலும் கலவரமோ, சண்டையோ வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எந்தவிதமான வழக்குகளும் (சிறிய வழக்குகள், சண்டை, குடும்பச்சண்டை விவாகரத்து, நிலப்பிரச்சனைகள்) எதுவும் போலீஸ் ஸ்டேசனுக்கு செல்ல கூடாது FIR ஆக கூடாது மிக பெரிய பிரச்சனைகள் மட்டுமே வழக்கிற்கு செல்ல வேண்டும் அதுவும் 6 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். (கொலை, கொள்ளை, கற்பழிப்பு)
பிரச்சனைகளை ஊர் தலைவர் முக்கிய பிரமுகர்கள், காவல் துறை அதிகாரி மற்றும் மனித உரிமை ஆணையத்திலிருந்து ஒருவர் (அல்லது) ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு நபர்களையும் சமரசம் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
ஊரில் நடக்கும் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களை அழைத்து Recall அதிகாரம் கேட்க வேண்டும்.
ஊரின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் டீ கடை அமைத்து தாத்தாக்களை அமர்த்த உள்ளே வருபவர்களை விசாரித்து உண்மை அறிந்தபின் ஊருக்குள் அனுமதிக்க வேண்டும்.
ஊரில் மக்களிடம் பேசி இரண்டு நல்ல நேர்மையான நபர்களை மட்டும் தேந்தெடுக்க வேண்டும்.
அவர்களில் யார் முதலில் பொறுப்பேற்பது என்பதையும் அவர்களிடமே விட்டுவிட வேண்டும்.
மக்களிடம் Whatsapp, Facebook, Telegram-மில் Opinion கேட்ட பிறகு அதில் அதிகப்படியான மக்களின் விருப்பத்தின்பேரில் எது தேவையோ அதை மட்டுமே முதலில் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் நேர்மையான மக்களுக்காக சேவை செய்யக்கூடிய தியாகிகளை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமமும், வார்டும் சிறந்த சேர்மனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
சிறந்த சேர்மன் M.L.A.-வையும் சிறந்த M.L.A-கள், M.P-யையும், சிறந்த M.P-க்குள் நல்ல பிரதமரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நல்ல பிரதமர்கள் சேர்ந்து நல்ல உலக தலைவரை உருவாக்க வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை போன்ற அமைப்புகளில் உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், மனிதஒற்றுமைக்காகவும், மனித நேயத்தோடு செயல்பட ஒரு கூட்டத்தையே உலக நாடுகள் அனைவரும் தயார் செய்ய வேண்டும்.